Friday, April 2, 2010
இத்தனை இயற்சாவு நேர்வு ( Fatality) ஏன்?
தற்செயலா?
விபத்தா?
திட்டமிட்ட செயலா?
இந்த அற்புதமான பிரபஞ்சத்தை இயற்றிய மகா கவிஞன் யார்?
ஆச்சரியமிக்க விண்மீன் மண்டலங்களைப் படைத்த மாபெரும் படைப்பாளி எங்கு வசிக்கிறார்?
பரிணாமத் தொடர்சங்கிலி வண்டியை இயக்கும் அறிவுஜீவி ஓட்டுனர் எங்குள்ளார்? அல்லது எங்குள்ளது?
சூரிய மண்டலத்தில் பூமியைத் தவிர வேறு கோள்களில் உயிரினம் ஏன் இல்லை?
மற்ற கோள்களில் உயிர்களை படைக்க முயன்ற படைப்பாளி அங்கெல்லாம் தோற்றுப் போனாரா?
அந்த படைப்பாளிக்கு நாம் வாழும் பூமியில் மட்டும் அவருடைய படைத்தல் முயற்சியில் வெற்றி கிடைத்ததா?
மற்றெந்த கோளிலும் உயிர் வாழ்க்கைக்கு சாத்தியமில்லை என்பது
ஒரு தற்செயல் நிகழ்வா?
விபத்தா?
திட்டமிட்ட செயலா?
அதாவது நம் பூமியை மட்டும் தேர்ந்தெடுத்து உயிர் கொடுத்தாரா அந்த படைப்பாளி?
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சிறுகோள் - பூமி மோதல் விபத்தில், அப்போது உயிர் வாழ்ந்த டைனொசார்ஸ் இனம் பூண்டோடு அழிந்தது எதனால்?
அவைகளை வேரறுத்து மனிதர்கள் வாழ வழி வகுத்துக் கொடுத்த 'நல்ல மனம்' எது?
இந்த நிகழ்வுகளும் விபத்துதானே!
மலர்களின் மகரந்தச் சேர்க்கையை கவனியுங்கள்.
லட்சோபலட்சம் மகரந்தத் துகள்கள் காற்றின் போக்கில் பரந்து திரிந்து பின்னர் தற்செயலாக ஒரு சில சூல்மூடிகளை மட்டும் கருவுறச் செய்வது ஏன்?
இதே லாட்டரிச் சீட்டு விந்தை, மனித விந்துக்களின் ஓட்டப் பந்தயத்திலும் ஒரே ஒரு விந்து மட்டும் கருமுட்டையுடன் சேரும் 'விபத்து' நிகழ்கிறதே எதற்காக?
மற்ற கோடிக்கணக்கான விந்துகள் என்னவாயிற்று?
அவற்றின் தலைவிதி என்ன?
அவைகள் 'படைக்கப்பட்டவை' என்று சொல்லும் பட்சத்தில் ஏன் 'படைக்கப்பட்டன'?
'மரபியல் நோக்கியலு' க்குரிய வடிவமைப்பு (teleological design) இருக்கிறது என்று காரணம் சொல்லப்பட்டால் இத்தனை வீணடிப்பு ஏன்?
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் லட்சக்கணக்கான உயிரினங்கள் மரணம் தழுவுவது யாருடைய கருணையால்?
இத்தனை இயற்சாவு நேர்வு ஏன்?
Why this much of fatality?
இத்தனை கேள்விகளுக்கும் பதிலென்ன? பதில் இருக்கிறதா!?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
// சிறுகோள் - பூமி மோதல் விபத்தில், அப்போது உயிர் வாழ்ந்த டைனொசார்ஸ் இனம் பூண்டோடு அழிந்தது எதனால்?//
is this the finalized truth. its also one of the hypothesis proposed isnt it.
நன்றி கையேடு.
உங்கள் கருத்தையொட்டி பதிவு ஒன்றை இணைத்துள்ளேன்.
பல "ஏன்" ... ஆனால் இதெல்லாம் யாருடைய கருணையாலேயா ... இல்லை ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும் நிகழ்வுகளா?
Post a Comment