இந்த பிரபஞ்சத்தில் 'உயிர்' எவ்வாறு பரிணமிக்கத் தொடங்கியிருக்கலாம் என்பது குறித்த ஆராய்ச்சியில் NASA வின் WMAP பின்வரும் கருத்தை முன்வைக்கிறது:-
"Our universe seems to have Goldilocks properties: not too much and not too little -- just enough mass and energy to support the development of life."
முந்தைய பதிவில், (பிரபஞ்சத்தில் உயிரின் பரிணாமம்...) இது தொடர்பாக விவரித்தபோது நண்பர் ரஞ்சித் பின்வரும் கருத்தை பின்னூட்டத்தில் எழுதியிருந்தார்.
//ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் நிறையும் ஆற்றலும் உயிர் உருவாவதற்கான சாத்தியத்தை நிர்ணயிப்பது எவ்வாறு?//
இந்த சந்தர்ப்பத்தில் 'Goldilocks Principle' பற்றி எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.
வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்றில்லாமல் இடைப்பட்ட சரிவிகித நிலைப்பாடு எடுப்பது குறித்து பேசுவதே 'கோல்டிலாக்ஸ் கொள்கை' எனப்படுவது.
இக்கொள்கையை பயன்படுத்தும் சான்றுகள் சில...
1.ஒரு கோள் சூரியனின் மிகத் தொலைவிலும் அல்லாமல், மிக அருகாமையிலும் அல்லாமல் சரியான தூரத்தில் அமைந்தால் மட்டுமே உயிரினம் துளிர்க்க சாத்தியப்படும் என வரையறுக்கிறது 'Rare Earth Hypothesis'. இத்தன்மையுடைய கோளை 'கோல்டிலாக்ஸ் கோள்' என்றே அழைக்கின்றனர். இக்கொள்கை சூரியனுக்கு மட்டுமின்றி எல்லா விண்மீன்களுக்கும் பொருந்தும்.
2. உயிரியல் மருத்துவத்திலும் இக்கொள்கை இடம் பெறுகிறது. உதாரணமாக 'anti-thrombotic புரதம்' மற்றும் 'pro-thrombotic புரதம்' இவையிரண்டின் அளவுகள் இக்கொள்கையை மீறும் பட்சத்தில் உயிர்க்கிறுதி ஆகிவிடும் என அச்சுறுத்துகிறது.
3. இந்தக் கொள்கை 'Goldilocks and the Three Bears' என்ற குழந்தைகள் கதையிலிருந்துதான் உருவானது.
கேள்விகள் தொடர்கின்றன பதில்களைத் தேடி...
No comments:
Post a Comment